Feb 07, 2018 05:51 AM

நடிகை ஸ்ரேயாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?

நடிகை ஸ்ரேயாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?

2001 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான ஸ்ரேயா, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ரஜினி, விஜய் என்று முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்த் அவர், சுமார் 12 ஆண்டுகளாக முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் குறைந்ததால் ரொம்பவே அப்செட்டான ஸ்ரேயா, வாய்ப்புக்காக கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி, அந்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் பரவ விட்டார். ஆனால், அவர் எதிர்ப்பார்த்தது போல பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை.

 

இந்த நிலையில், ஸ்ரேயாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அநேகமாக வரும் மார்ச் மாதம் அவரது திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

 

ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவரை காதலித்து வரும் ஸ்ரேயா, அவரை மார்ச் மாதம் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளாராம். இது தொடர்பாக ரஷ்யாவுக்கு பறந்துள்ள ஸ்ரேயா குடும்பத்தினர், ஸ்ரேயாவின் காதலர் குடும்பத்தாருடன் திருமணம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி பிறகு திருமண தேதியை அறிவிக்க இருக்கிறார்களாம். ஸ்ரேயாவின் திருமணத்தை ராஜஸ்தானில் நடத்த திட்டமிட்டுள்ள அவரது குடும்பத்தார், ரஷ்யாவிலும் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

 

திருமணம் குறித்து ஸ்ரேயா தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், இதை அவர் மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.