நடிகர் பார்த்திபன் - நடிகை சீதா தம்பதியின் இளைய மகளான கீர்த்தனாவுக்கு வரும் மார்ச் 8 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. பிரபல படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனான அக்ஷயை கீர்த்தனா மனக்க உள்ளார்.
மகளின் திருமணத்திற்காக திரையுலக பிரமுகர்களை நேரில் சந்தித்து பார்த்திபன் அழைப்பிதழ் வழங்கி வருகிறார். இதற்கிடையே, பிரிந்து வாழும் சீதாவும், பார்த்திபனும் மகளின் திருமணத்திற்காக மீண்டும் சேரப் போவதாக கூறப்பட்டது. மேலும், பார்த்திபன் சீதாவை நேரில் சந்தித்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில், கீர்த்தனா - அக்ஷய் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் கலந்துக் கொண்ட இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்வில் நடிகை சீதா கலந்துக்கொண்டது, பார்த்திபனின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்ததோடு, இந்த தம்பதி மீண்டும் சேர மாட்டார்களா, என்று எதிர்ப்பார்த்தவர்களையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...