ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவாக பேசிய இயக்குநர் பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்ய, காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வைரமுத்துவுக்கு ஆதரவாக பேசிய பாரதிராஜாவின் பேச்சு வண்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி, இந்து மக்கள் முன்னணி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த புகார் மீது எந்தவித விசாரணையும் போலீஸ் தரப்பில் நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இந்து மக்கள் முன்னணி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இயக்குநர் பாரதிராஜா மீதான புகார் குறித்து விசாரிக்க காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்ததோடு, வன்முறையை தூண்டும் வகையில் பாரதிராஜா பேசியதாக அளித்த புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும், என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...