கஜினி போல காதலில் எத்தனை தோல்வி ஏற்பட்டாலும் தொடர்ந்து காதலித்துக் கொண்டிருப்பேன், என்பதை சொல்லாமல் செயலில் காட்டும் நயந்தாராவின் தற்போதைய காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவன், பம்பர் லாட்டரி அடித்தது போல ரொம்பவே குஷியாக இருக்கிறார்.
காரணம், அவர் தனக்கான வாய்ப்பை தேடி செல்வதில்லையாம், அவருக்காக நயந்தாராவே பல பெரிய ஹீரோக்களிடம் பேசி வருகிறாராம். அப்படி கிடைத்த வாய்ப்பு தான் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படமும். ஆனால், அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் தோல்விப் படம் கொடுத்த விக்னேஷ் சிவனுக்கு, சிவகார்த்திகேயன் படத்தை இயக்கும் வாய்ப்பையும் நயன் தான் வாங்கிக்கொடுத்தாராம். ஆனால், அந்த படத்தில் இருந்தும் விக்னேஷ் சிவன் விலகியுள்ளார். காரணம் அவர் சொன்ன கதை சிவாவுக்கு பிடிக்கவில்லை என்ற ஒரு தகவலும் கசிந்துள்ளது.
இந்த நிலையில், சும்மா இருக்கும் தனது காதலருக்காக நயந்தாரா பெரிய திட்டம் ஒன்றை போட்டுள்ளாராம். அதாவது அவரை இயக்குநராக்குவதோடு, ஹீரோவாகவும் ஆக்க திட்டம் போட்டுள்ளார். அதன்படி தனது காதலர் இயக்கி ஹீரோவாக நடிக்கும் படத்தை தானே தயாரிப்பதோடு, அந்த படத்தில் ஹீரோயினாகவும் நடிக்க முடிவு செய்துள்ள நயந்தாரா, அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை தற்போது தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...