‘ரெட்ட சுழி’ படத்திற்குப் பிறகு தாமிரா இயக்கும் படம் ‘ஆண் தேவதை’. இதில் சமுத்திரக்கணி, ரம்யா பாண்டியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, இவர்களுடன் ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், சுஜா வருணி, ஹரிஷ் ஃபெராடி, அபிஷேக், கவின், பேபி மோனிகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மு.காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதோடு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்துச் சென்றுக்கொண்டிருக்கிறது. அதற்கு முன்பாக இந்த டிரைலர் வெளியிடப்பட்ட விதத்தாலும், இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காரணம், இந்த டிரைலரை தமிழ் சினிமாவின் முக்கியமான 11 பிரபலங்கள் ஒன்று சேர்ந்து வெளியிட்டுள்ளனர்.
நடிகர்கள் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், விஜய் ஆண்டனி, இயக்குநர்கள் ஏ.ஆர் முருகதாஸ், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வெற்றிமாறன், சீனுராமசாமி, ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் ஆகிய 11 பிரபலங்கள் ஒன்றாக சேர்ந்து ‘ஆண் தேவதை’ டிரைலரை வெளியிட்டுள்ளனர்.
இன்றைய சமூகத்துக்கு சொல்ல வேண்டிய மிக முக்கிய கருத்தைப் பேசும் இந்த ‘ஆண் தேவதை’ மூலம் இணைந்துள்ள தாமிராவும், சமுத்திரக்கனியும் வெற்றி பெற வேண்டும், அதற்காக நாங்கள் உறுதுணையாக இருப்போம், என்று 11 பிரபலங்களும் கூறியுள்ளனர்.
சிகரம் சினிமாஸ் சார்பில் அ.ஃபக்ருதீன் மற்றும் ஷேக் தாவூத் ஆகியோர் தயாரிக்க, சைல்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் முஸ்தபா, குட்டி ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...