ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ‘விஜய் 62’ என்று அழைக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திரைத்துறை வேலை நிறுத்தத்தால் நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே, நிறுத்தப்பட்ட விஜய் படத்தின் படப்பிடிப்பு சிறப்பு அனுமதியோடு மீண்டும் சென்னையில் நடைபெற தொடங்கியது. இதற்கு தயாரிப்பாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், செட் போடப்பட்டு விட்டதால், 3 நாட்களுக்கு மட்டும் படப்பிடிப்பு நடத்திக்கொள்வதற்காக சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. என்னதால் விளக்கம் அளித்தாலும், விஜய் படத்தின் படப்பிடிப்பு நடந்ததற்கு நடிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்தனர். இதனால் தமிழ் சினிமாவில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் அருகே விஜய் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் விஜய் ரசிகர்களை திடீரென்று சந்தித்துள்ளார். விஜய் படப்பிடிப்பு நடப்பதை அறிந்த ரசிகர்கள் படப்பிடிப்பு தளம் அருகே சூழ்ந்துக்கொண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ரசிகர்களை சந்தித்த விஜய், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க வேண்டும், என்று அறிவுரை கூறினாராம்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...