Latest News :

விஷாலை சந்தித்த ரஜினிகாந்த் வேலை நிறுத்தத்திற்கு எதிர்ப்பு!
Sunday March-25 2018

கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் அதிக கட்டண வசூலிப்பை குறைக்க வேண்டும், திரையரங்கத்தில்  டிக்கெட் விலை ஒழுங்குப்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வரும் இந்த போராட்டத்திற்கு ஆரம்பத்திலேயே ரஜினிகாந்த் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், செயலாளர் கதிரேஷன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் நேற்று ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து போராட்டம் குறித்து விளக்கி கூறியுள்ளனர்.

 

சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, போராட்டத்தின் அவசியத்தை விஷால் ரஜினியிடம் விளக்கி கூறினாராம். அனைத்தையும் கேட்டுக்கொண்ட ரஜினிகாந்த், இறுதியில் போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த வேலை நிறுத்தத்தால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், தயாரிப்பாளர்களுக்கு நன்மை நடக்க வேண்டும் அதே சமயம் தொழிலாளர்களும் பாதிக்கப்பட கூடாது, என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related News

2262

’லாரா’ படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!
Saturday June-15 2024

'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும்  பேசும்' என்பார்கள்...

”டிஜிட்டல் தளங்களில் படைப்பு சுதந்திரம் இல்லை” - ’கருடன்’ வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேச்சு
Saturday June-15 2024

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...