Mar 24, 2018 06:45 AM

’காலா’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

’காலா’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘காலா’ அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. 

 

நடிகர் தனுஷ் தயாரித்துள்ள இப்படம் மிகப்பெரிய தொகைக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாகவும், இப்படத்தின் வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவெ ரஜினியை வைத்து 2.0 என்ற மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படத்தையும் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் முதலில் வெளியாவது 2.0 - வா அல்லது ‘காலா’ வா என்ற நிலையில், காலா தான் முதலில் வெளியாகும் என்று அப்படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது இரண்டு படங்களும் லைகா நிறுவனத்திடம் உள்ளதால், வெளியீட்டில் எந்தவித குழப்பமும் ஏற்படாது என்பது உறுதியாகியுள்ளது.

 

இந்த நிலையில், காலா படம் குறித்த யாரும் அறிந்திராத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது காலா படத்தில் நடிக்கும் சாக்‌ஷி அகர்வால் ரஜினிகாந்துக்கு மகளாக நடிக்கிறார், என்று கூறப்பட்டு வந்த நிலையில், அது பொய்யாண தகவலாம், அவர் ரஜினிக்கு மருமகளாக நடிக்கிறாராம்.

 

சமுத்திரக்கனி, நானா படேகர், ஈஸ்வரி ராவ், அஞ்சலி பட்டில், சுகன்யா, அரவிந்த் ஆகாஷ், சாயஜி ஷிண்டே, ரவி காலே, பங்கஜ் திருபாதி, சாக்‌ஷி அகர்வால் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தில் ரஜினியின் மகனாக திலீபன் நடிக்கிறார்.