Feb 07, 2018 06:17 AM

‘தானா சேர்ந்த கூட்டம்’ பிளாப் படம் தான் - தியேட்டர் உரிமையாளர் தகவல்!

‘தானா சேர்ந்த கூட்டம்’ பிளாப் படம் தான் - தியேட்டர் உரிமையாளர் தகவல்!

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் தோல்விப் படம் என்றும், அப்படத்தால் விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் நஷ்ட்டம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதற்கிடையே, டிவிட்டரில் ஒருவர், பொங்கலுக்கு வெளியான எந்த படமும் வெற்றி பெறவில்லை, என்று பதிவிட்டிருந்தார்.

 

ட்விட்டர் பதிவால் கோபமடைந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ பட இயக்குநர் விக்னேஷ் சிவன், “என் ஆபிசுக்கு வந்து காசுக்காக பிச்சைஎடுக்குறீர்கள், பின்னர் படம் பிளாப் என பதிவிடுகிறீர்கள்” என்று அந்த டிவிட்டர் பதிவை போட்டவருக்கு ட்விட்டரிலேயே பதில் அளித்தார். இந்த விவகாரம் குறித்து மேலும் சிலர் ட்விட்டரில் விவாதத்தில் ஈடுபட்டார்கள்.

 

இந்த நிலையில், ’தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் வசூல் குறித்து சென்னை ரோகினி தியேட்டரின் உரிமையாளர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

அதில், ”இந்த வருடம் பொங்கலுக்கு வந்த படங்களின் மொத்த வசூல் சென்ற வருடம் வந்த பைரவாவின் வசூலை நெருங்க கூட முடியவில்லை" என அவர் கூறியுள்ளார். அவரது இந்த பதிவால், ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் பிளாப் படம் என்று உறுதியாகிவிட்டது.