Take a fresh look at your lifestyle.

கணவர் அதற்கு சரிபட்டு வர மாட்டார், நண்பர்கள் தான்..! – கீர்த்தி சுரேஷ்

30

தென்னிந்தியாவின் உலகத்தரம் வாய்ந்த வணிக நிறுவனமான ‘செளத் இந்தியா ஷாப்பிங் மால்’ (South India Shopping Mall) சென்னையில் தனது முதல் கிளையை இன்று (அக்.26) திறந்தது. சென்னை, வேளச்சேரியில் உள்ள தண்டீஸ்வரம் மெயின் ரோட்டில் உலகத் தரம் வாய்ந்த வணிக அனுபவத்தை வழங்கும் தனது புதிய பிரம்மாண்டமாக் கிளையத் திறந்து வைத்து தென்னிந்தியாவின் சில்லறை வணிகச் சந்தையில் தனது தடம் பதித்துள்ளது ‘செளத் இந்தியா ஷாப்பிங் மால்’.

மேம்பட்ட சில்லறை விற்பனைச் சூழலை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்தப் புதிய கிளை, உற்சாகம் நிறைந்த வேளச்சேரிப் பகுதியில் பதுமையான வணிக அனுபவத்தை வழங்கும் வகையில், ஒரே இடத்தில் பிரத்யேக தீபாவளி ஆடைத் தொகுப்புகள், பாரம்பரிய பட்டுப் புடவைகள் மற்றும் ஆடைகள், பண்டிகைக்கால ஆடைகள், குடும்பத்தினர் அனைவருக்கும் ஏற்ற சமகாலத்திய நவீன் ஃபேஷன் ஆடைகள் என அனைத்தையும் வழங்குகிறது.

பிரபல திரை நட்சத்திரம் கீர்த்தி சுரேஷ், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட்டு சிறப்பித்ததுடன், பாரம்பரிய விளக்கை ஏற்று வைத்து, ரிப்பன் வெட்டி புதிய ‘செளத் இந்தியா ஷாப்பிங் மால்’ கிளையை தொடங்கி வைத்தார். சென்னையைச் சேர்ந்த ஏராளமான உற்சாகமிக்க பொதுமக்களும், ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களும் இந்தப் பிரம்மண்டத் திறப்பு விழாவைக் கொண்டாடவும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பண்டிகைக்கால ஆடைத் தொகுப்புகளைப் பார்வையிட்டு வாங்கவும் திரளாகக் கூடினர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், “வேளச்சேரியில் ‘செளத் இந்தியா ஷாப்பிங் மால்’-ன் அழகான புதிய கிளையத் தொடங்கி வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தீபாவளிக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஆடைகள் மிகவும் அற்புதமாக தோன்றுவதுடன், அவற்றில் இடம்பெற்றுள்ள நேர்த்தியான வண்ணங்கள், நுணுக்கமான வேலைப்பாடுகள் மற்றும் அழகான வடிவமைப்புகள், பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சியான உணர்வை மிகச்சிறப்பாக பிரதிபலிக்கின்றன.

சென்னை, வேளச்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி மக்கள் அளித்த அன்பான வரவேற்பிற்கு மனமார்ந்த நன்றி. உங்களுக்காக இப்படி ஒரு பிரம்மாண்டமான வணிக வளாகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த தீபாவளி பண்டிகையில் உங்களுக்கான சிறந்த வனிக அனுபவத்தை கொடுக்கும் ஒரு இடமாக ‘செளத் இந்தியா ஷாப்பிங் மால்’ நிச்சயம் இருக்கும்.” என்றார்.

மேலும், நிகழ்ச்சி தொகுப்பாளி உங்களுக்கு எந்த மாதிரியான ஆடை பிடிக்கும் ? என்ற கேள்விக்கு, பட்டு புடவை தான் மிகவும் பிடிக்கும், என்று கீர்த்தி சுரேஷ் பதில் அளித்தார். உங்களுடைய ஷாப்பிங் மெட் யார், உங்கள் கணவரா ? என்ற மற்றொரு கேள்விக்கு, “என் கணவர் அதற்கு சரிபட்டு வர மாட்டார், என்று ஆங்கிலத்தில் பதில் அளித்த கீர்த்தி சுரேஷ், எனது பெண் நண்பர்கள் தான் எனக்கான ஷாப்பிங் மெட், அவர்களுடன் தான் எப்போதும் ஷாப்பிங் செல்வேன், என்று தெரிவித்தார்.

‘செளத் இந்தியா ஷாப்பிங் மால்’ நிறுவனத்தின் தலைவர் மற்றும் முழுநேர இயக்குநர் பொட்டி வெங்கடேஸ்வர்லு பேசுகையில், “எங்கள் பிராண்டை வேளச்சேரிக்கு கொண்டு வந்திருப்பது எங்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் தருணமாகும். இந்தப் பரபரப்பான பகுதிக்கு குடும்பத்தினர் அதிகம் வந்து செல்வதால், எங்களின் பண்டிகைக்கால மற்றும் திருமண ஆடைத் தொகுப்புகளை அறிமுகப்படுத்த மிகவும் பொருத்தமான இடமாக இதை நாங்கள் கருதுகிறோம்.” என்றார்.

நிர்வாக இயக்குநர் சீர்னா ராஜமெளலி பேசுகையில், “குறிப்பாக தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைக் காலங்களில், குடும்பத்தினர் அனைவருக்கும் எளிய, இனிமையான, மலிவு விலை ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதே எங்களின் நோக்கம்.” என்றார்.

முழுநேர இயக்குநர் திருவீதுலா பிரசாத ராவ் பேசுகையில், “பாரம்பரிய பட்டுப் புடவைகள், பண்டிகைக் கால விருந்துகளுக்கான ஆடைகள் மற்றும் அன்றாடம் அணிவதற்கான ஆடைகள் என நீங்கள் எதைத் தேடினாலும், ஒவ்வொரு வயதினருக்கும் அவரவர் தனிப்பட்ட விருப்பம் மற்றும் பாணிக்கு ஏற்ற ஆடைத் தேர்வுகளை நாங்கள் ஒரே இடத்தில் வழங்குகிறோம்.” என்றார்.

புதிதாகத் தொடங்கப்பட்ட வேளச்சேரி ஷோரூமில், தூய பட்டுப் புடவைகள், அதிக சரிகை போட்ட திருமணப் பட்டுப் புடவைகள், பாரம்பரிய உடைகள், நவீன மேற்கத்திய ஆடைகள் மற்றும் வண்ணமயமான குழந்தைகளுக்கான ஆடைகள் எனப் பல்வேறு வகையான ஆடைகளுக்காக விசாலமான தளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வளாகத்தின் பிரம்மாண்டமான திறப்பு விழாவைக் குறிக்கும் விதத்தில், அனைத்து ஆடைத் தொகுப்புகள் மீதும் கவர்ச்சிகரமான பண்டிகைக்காலத் தள்ளுபடிகள் மற்றும் தொடக்கச் சலுகைகளை இந்த விற்பனையகம் அறிவித்துள்ளது.