‘96’ மற்றும் ‘மெய்யழகன்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் பிரேம் குமார், தனது மூன்றாவது படத்திற்காக நடிகர் ஃபஹத் பாசிலுடன் கைகோர்த்துள்ளார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் டாக்டர்.ஐசரி கே.கணேஷ் தயாரிக்கும் இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிலையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, படத்தின் தலைப்பு ‘அசரீரி’ என்று அறிவிக்கப்பட்டிருப்பதோடு, வரும் 2027 ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தில் படத்தை வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ஃபஹத் பாசில் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஷிவதா நடிக்கிறார். இவர்களுடன் சேர்த்தன், ஹரிஷ் உத்தமன், கருணாகரன், சரண் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்ய, மகேஷ் மேத்யூ சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். குமார் கங்கப்பன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.