Take a fresh look at your lifestyle.

நடிகை தேவயானியின் மகள் ஹீரோயினாக நடிக்கும் இரண்டாவது படம் பூஜையுடன் தொடங்கியது!

119

நடிகை தேவயானி – இயக்குநர் ராஜகுமாரன் தம்பதியின் மூத்த மகள் பிரியங்கா ராஜகுமாரன், நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், பிரஷாந்த் நடிப்பில் உருவாகும் ‘ரஞ்சன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், பிரியங்கா ராஜகுமாரன் மற்றொரு படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

அருள் முருகன் பிக்சர்ஸ் (Arul Murugann Picture) மற்றும் ட்ரீம் ரன்வே 26த் சென்சூரி (Dream Runway 26th Century) சார்பில் க.இ.மணிகண்டன் என்கிற விமல்.ஜி தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் அமல் அஜித் நாயகனாக நடிக்க, நாயகியாக பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கிறார்.

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த அமல் அஜித், சமூக வலைதளங்களில் தனது வீடியோக்கள் மூலமாகவும் கவனம் ஈர்த்தவர். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்படும் இவர், தற்போது ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நாயகனாக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் பூஜையுடன் நடைபெற்றது. இதில், நடிகை தேவயானி – இயக்குநர் ராஜகுமாரன் தம்பதி கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் அழகான காதல் கதையுடன், அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

தயாரிப்பு மேற்பார்வையாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட க.இ.மணிகண்டன் என்கிற விமல் G, அந்த அனுபவத்தின் அடிப்படையில் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ திரைப்படத்தை மிகச் சிறப்பாக உருவாக்கி வருகிறார். திரைப்படத் தயாரிப்பின் பல்வேறு அம்சங்களில் பெற்ற அனுபவத்தையும், திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புத் திறனையும் பயன்படுத்தி, ரசிகர்களைக் கவரும் வகையில் இப்படத்தை உருவாக்குவதில் அவர் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.

செம்பர் வி.முருகேசன் இயக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைக்கிறார். டி.முத்துராஜ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்ற, இயங்கோ படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்குநராக கண்ணன்.எஸ் பணியாற்ற, பி.சி.ஸ்டண்ட்ஸ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். பாபா பாஸ்கர் நடனக் காட்சிகளை வடிவமைக்க, பா.விஜய் பாடல்கள் எழுதுகிறார்.

பூஜையுடன் தொடங்கியுள்ள ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு துவக்கம் நாள் உள்ளிட்ட படம் பற்றி மற்ற தகவல்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.