பல்வேறு வகைகளில் சிறப்பான பிராந்தியக் கதைகளை வழங்கி, ஒரிஜினல் சீரிஸ் பிரிவில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கி வரும் தமிழ் ஜீ5 தற்போது ‘ஆக்டோபஸ்’ (Octopus) எனும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் தொடரை பார்வையாளர்களிடம் கொண்டு வரத் தயாராகியுள்ளது. வழக்கமான கதை சொல்லும் முறைகளுக்கு மாறாக, வலுவான பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் தொடர், மர்மம், உணர்வு மற்றும் சுவாரஸ்யத்தை ஒன்றிணைக்கிறது.
ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கியுள்ள ‘Octopus’ 7 எபிசோடுகளைக் கொண்ட Tamil Zee 5 Original தொடராகும். இதில் அஷ்வின், அர்ச்சனா, வினோத் கிஷன், சித்து குமரேசன் மற்றும் கலைவாணி பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒரு இளம் பெண் காணாமல் போனதைத் தொடர்ந்து, அந்த உண்மையை கண்டறிய ஒரு நெருக்கமான அக்கம்பக்கத்தினர் ஒன்றிணைகின்றனர். இந்த தேடல், மறைந்திருக்கும் பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் எதிர்பாராத நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது. இவ்வாறு மர்மம், உணர்வுகள் மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.
Tamil Zee 5-ன் சமூக வலைதளங்களில் ‘Octopus’ தொடரின் அறிமுக புரோமோ வெளியானது முதல், இந்தத் தொடர் ஆன்லைனில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. சுவாரஸ்யமான கதைக்களம், ரசிகர்களின் யூகங்கள், கணிப்புகள் என இயல்பான டிஜிட்டல் உரையாடல்களையும் உருவாக்கியுள்ளது.
வெறும் சஸ்பென்ஸ் திரில்லராக ஆக மட்டுமின்றி, நம்பிக்கை, உறவுகள், மன உறுதி மற்றும் மனிதர்களுக்கிடையேயான உறவின் நீடித்த சக்தி உள்ளிட்ட பல்வேறு முக்கியமான கருப்பொருள்களையும் ‘Octopus’ ஆராய்கிறது. அன்றாட வாழ்க்கையின் உண்மைத் தன்மையில் வேரூன்றிய இந்தத் தொடர், ஆழமான உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் மூலம் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் உருவாகியுள்ளது. இறுதிவரை என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், மர்மத்தை தொடர்ந்து தக்கவைக்கும் விதத்திலும் இந்தத் தொடர் அமைந்துள்ளது.
ஜீ 5 தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் பதிப்பின் வியாபார தலைவர் லாய்ட் சி.சேவியர் கூறுகையில், “அறிமுக புரோமோவுக்கு கிடைத்துள்ள வரவேற்பால் நாங்கள் உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளோம். மேலும்,‘Octopus’ தொடரின் பரபரப்பான உலகத்தை பார்வையாளர்கள் அனுபவிக்கப் போவதை நினைத்து நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம்.
தமிழ் பார்வையாளர்கள் நீண்ட காலமாக கிரைம் மிஸ்டரிஸ் மற்றும் இன்வேஷ்டிகேஷன் திரில்லர் போன்ற கதைகளை வரவேற்று வருகின்றனர். ‘Octopus’ இந்த வகை கதைகளுக்கு ஒரு புதிய கோணத்தை வழங்குகிறது. ஒரு பெண்ணை கதையின் மையத்தில் வைத்து, நெருக்கடியான சூழ்நிலையில் ஒரு ஒட்டுமொத்த சமூகமும் எவ்வாறு ஒன்றிணைகிறது என்பதை இந்தத் தொடர் எடுத்துக்காட்டுகிறது.
வலுவான கதைக்களம், உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் மற்றும் திறமையான நட்சத்திரக் குழுவுடன்,‘Octopus’ ஒரு பரபரப்பான மற்றும் ஆழமான பார்வை அனுபவத்தை வழங்கும். இந்த தனித்துவமான கதையை Tamil Zee 5 மூலம் பார்வையாளர்களிடம் பிரத்தியேகமாக கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கதாபாத்திரங்களுடன் பார்வையாளர்கள் தங்களை இணைத்துக்கொண்டு, அவர்களின் பயணத்தில் ஈடுபட்டு, மர்மம் படிப்படியாக வெளிப்படும் போது உண்மையை கண்டறியும் அனுபவத்தைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
எழுத்தாளர் மற்றும் இயக்குநர் ஜெயச்சந்திர ஹாஷ்மி கூறுகையில், “கொரோனா ஊரடங்கின் போது நான் ‘Octopus’ கதையை எழுதினேன். அந்தக் காலகட்டத்தில் நாம் அனைவரும் மூடப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட அக்கம்பக்கச் சூழலில் வாழ வேண்டியிருந்தது. நாம் பார்ப்பது எப்போதும் உண்மையில் இருப்பதைப் பிரதிபலிப்பதில்லை. இது நம்மைச் சுற்றியுள்ள அனைத்திற்கும் பொருந்தும் – மனிதர்கள், உறவுகள், சமூகம் மற்றும் அவற்றுக்குள் இருக்கும் ஆழமான அடுக்குகள்.
இந்தக் கருப்பொருளை பல்வேறு பரிமாணங்களுடன் கூடிய ஒரு பெரிய களத்தில் ஆராய விரும்பினேன். ஒரு மர்மத்தையும் ஒரு பெண்ணையும் கதையின் மையத்தில் வைத்தது, நாங்கள் ஆராய விரும்பிய கருப்பொருள்களுக்கு மேலும் ஆழத்தைச் சேர்த்தது. ஒரு மர்மமான காணாமல் போதலில் தொடங்கும் கதை, Octopus-ன் கரங்களைப் போல எதிர்பாராத திசைகளில் விரிவடைகிறது.
Tamil Zee 5 தொடர்ந்து சமூக அக்கறை கொண்ட, தாக்கத்தை ஏற்படுத்தும் உள்ளடக்கங்களை உருவாக்கி வருகிறது. Zee5-ல் ‘Octopus’ தொடரை பார்வையாளர்கள் அனுபவிக்கப் போவதை நினைத்து நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.” என்றார்.
சினிமம் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் ஆதித்யா ஆர்.ராஜு மற்றும் லிஷா பி.சந்திரன் கூறுகையில், “சினிமம் சினிமாவின் எதிர்காலம் புதிய குரல்களுக்கு சொந்தமானது என்று நாங்கள் நம்புகிறோம். அந்த நோக்கத்தின் பெருமைக்குரிய பிரதிபலிப்பாக ‘Octopus’உள்ளது. வளர்ந்து வரும் கலைஞர்களை ஊக்குவிப்பதும், புதிய திறமைகளுக்கு அர்த்தமுள்ள வாய்ப்புகளை உருவாக்குவதும் எங்களது பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.
எங்களது நடிகர்களின் இடைவிடாத ஆதரவுக்கும், ஒவ்வொரு காட்சியையும் உருவாக்க தங்களால் முடிந்த அனைத்தையும் வழங்கிய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நான் ஆழ்ந்த நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எங்களது இயக்குநர் அழகான, உணர்வுப்பூர்வமாக ஈர்க்கக்கூடிய திரைக்கதையை உருவாக்கியுள்ளார். எங்களது DOP அந்தக் கற்பனையை அற்புதமான காட்சிகளாக மாற்றி, கதை சொல்லலை உண்மையிலேயே உயர்த்தியுள்ளார்.
இப்போது பார்வையாளர்களின் எதிர்வினையை அனுபவிக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். ஏனெனில் சிறந்த சினிமா துணிச்சலில் தொடங்குகிறது, ஆனால் அது பார்வையாளர்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்கிறது.‘Octopus’ ஒரு தொடர் மட்டுமல்ல; ஆர்வமும் நோக்கமும் ஒன்றிணையும்போது மறக்க முடியாத கதைகள் பிறக்கின்றன என்பதற்கான சான்றாகும்.” என்றார்.
நடிகை அர்ச்சனா கூறுகையில், “‘Octopus’ தொடரில் என்னை மிகவும் கவர்ந்தது, அதன் பரபரப்பான கதைக்குள் இருக்கும் உணர்வுப்பூர்வமான உலகம். எனது கதாபாத்திரம் ஒரு மர்மத்தின் மத்தியில் சிக்கிக் கொள்வது மட்டுமல்ல; அவளது பயணம் ஒரு முழு அக்கம்பக்கத்தினரையும் இணைக்கும் ஒரு நூலாக மாறுகிறது. மேலும், பல மறைக்கப்பட்ட உண்மைகள் படிப்படியாக வெளிவருவதற்கும் அது வழிவகுக்கிறது.
அதன் மையத்தில், இந்தத் தொடர் ஒரு பெண் தனக்கான ஒரு இடத்தை கண்டுபிடிப்பதைப் பற்றியும், அவள் காணாமல் போகும் போது அவளைச் சுற்றியுள்ள மக்கள் ஒன்றிணைவதைப் பற்றியும் பேசுகிறது. நம்பிக்கை, உறவுகள், உள்ளுணர்வு மற்றும் பதில்களைக் கண்டறியும் உறுதி ஆகியவற்றை இந்தத் தொடர் ஆராய்கிறது. அதே நேரத்தில், பார்வையாளர்களை தொடர்ந்து யூகிக்க வைக்கிறது.
பல உணர்வுப்பூர்வமான அடுக்குகளைக் கொண்ட ஒரு கதையில் கதாநாயகியாக நடிப்பது எனக்கு மிகவும் நிறைவான அனுபவமாக இருந்தது. இப்போது ‘Octopus’ Tamil Zee 5 மூலம் பார்வையாளர்களை சென்றடையப் போவதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.” என்றார்.
அஷ்வின் கூறுகையில்: “ZEE5-ல் ஸ்ட்ரீமாகவுள்ள ‘Octopus’ தொடரின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். மனிதர்களின் நடத்தை, உறவுகள் மற்றும் நாம் வாழும் சமூகத்தின் பல்வேறு பரிமாணங்களை ஆராயும் ஒரு கதையின் பகுதியாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்தத் தொடரில் என்னை மிகவும் ஈர்த்தது அதன் வலுவான எழுத்தும், ஒரு தம்பதியின் உலகத்திலிருந்து முழு அக்கம்பக்கத்தின் பெரிய இயக்கவியலுக்கு கதை விரிவடையும் விதமும் தான். கடந்த காலங்களில் சிறப்பாக எழுதப்பட்ட சில தமிழ் திரைப்படங்களை நினைவூட்டும் ஒரு தனித்துவமான சுவை இதில் உள்ளது. அதே நேரத்தில், இது ஒரு புதிய பார்வையையும் வழங்குகிறது.
இத்தகைய வலுவான எழுத்து, பார்வை மற்றும் செயலாக்கம் ஒன்றிணைந்திருப்பதால் ‘Octopus’பார்வையாளர்களுக்கு ஒரு புதிய கதை சொல்லல் அனுபவமாக இருக்கும் என்று நான் உண்மையாக நம்புகிறேன்.” என்றார்.