Take a fresh look at your lifestyle.

திரைப்படங்களின் முதலீடுக்கு ஏற்ப சம்பளம்! – தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய முயற்சி

16

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி முன்னிலையில், தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து, சம்மேளனத்தில் இணைக்கப்பட்டுள்ள 23 சங்கங்களின் தலைவர், செயலாளர் கலந்துகொண்ட கலந்துரையாடல் கூட்டம், இன்று சென்னைனையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தயாரிப்பாளர்களின் நன்மை கருதி முக்கிய முடிவுகள் எடுக்கபட்டுள்ளது. அதில் குறிப்பாக தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்காத வண்ணம், தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சியாக, சிறிய, நடுத்தரம் மற்றும் பெரிய முதலீடு என்று மூன்று வகையாக பிரித்து அதற்குரிய சம்பளம் வழங்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து முடிவு செய்து நடைமுறைபடுத்த திட்டமிட்டுள்ளனர். இது இந்திய திரையுலகிற்கு எடுத்துக்காட்டாய் அமையும் என்பதில் ஐயமில்லை.

மேற்படி கூட்டத்தில் சங்கத்தின் முன்னாள் தலைவர் கலைப்புலி எஸ் தாணு, துணைத்தலைவர் எஸ்.கமலக்கண்ணன் செயலாளர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.ராதாகிருஷ்ணன், பொருளாளர் என்.சுபாஷ் சந்திர போஸ், இணைச் செயலாளர் சுஜாதா விஜயகுமார், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் டி. சிவா, பொருளாளர் தனஞ்செயன் மற்றும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் இயக்குநர் ஆர்.வீ.உதயகுமார், இயக்குநர் பேரரசு ஆகியோர் கலந்துகொண்டார்கள்.