Take a fresh look at your lifestyle.

‘யுனிவர்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது

18

யுனிவர்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் புதிய திரைப்படத்தின் பூஜை விழா, இன்று (04.08.2026) சென்னையில் திரையுலக பிரபலங்கள் மற்றும் படக்குழுவினரின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த திரைப்படத்தில் முத்துக்குமார், புகழ், சென்ட்ராயன், ராமர், சரத், அஜய் ராஜ், பவேல் நவகீதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் மூலம் மதன் துரை இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இவர் விஜய் டிவியில், அது இது எது, கலக்கப் போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளில் எழுத்தாளராக பணியாற்றி இருக்கிறார். மேலும், சிக்ஸர், சட்டம் என் கையில் ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். ஒளிப்பதிவை பி.ஜி. முத்தையா மேற்கொள்கிறார். இசையமைப்பாளராக எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட், கலை இயக்குநராக தினேஷ் குமார் பணியாற்றுகின்றனர். ஸ்டண்ட் இயக்குனராக கணேஷ் பணியாற்ற, தயாரிப்பு நிர்வாக பணியை இரா.குமரேசன் மேற்கொள்கிறார்.

பூஜை விழாவில் RSSS பிக்சர்ஸ் நிறுவனர் எஸ்.தணிகை வேல் மற்றும் சமூக ஆர்வலர் மதிச்சியம் A. கார்த்திக் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு படத்தை துவக்கி வைத்தார். மேலும் திரையுலக பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் ஊடகத்தினர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். டார்க் காமெடி ஜானராக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு  செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது.

யுனிவர்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த முதல் திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.