பிக் பாஸ் தமிழ் கொண்டாட்டம் வேன் – பிக் பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Celebration Van, Bigg Boss Tamil Season 10) அனுபவத்தை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது. ஏற்கனவே சென்னை, வேலூர் மற்றும் சேலம் நகரங்களைத் தொடர்ந்து, தற்போது கோயம்புத்தூரில் ரசிகர்களிடம் உற்சாகமான வரவேற்பைப் பெற்று வருகிறது. மழையையும் பொருட்படுத்தாமல், ரசிகர்கள் பெருமளவில் வந்து Celebration Van-ஐ கண்டு ரசித்து வருகின்றனர்.
Celebration Van-ல் அமைக்கப்பட்டுள்ள Confession Room ரசிகர்களின் முக்கிய ஈர்ப்பாக மாறியுள்ளது. இதில் ரசிகர்கள் தங்களது Confession-களை பகிர்ந்து கொள்வதுடன், மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு, தற்போது ஒளிபரப்பாகி வரும் Bigg Boss Tamil Season 10 குறித்த தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
குழந்தைகள், பெரியவர்கள், மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பினரும் Bigg Boss Tamil Celebration Van-ஐ நேரில் பார்த்து, அதில் பங்கேற்று மகிழ்ந்து வருகின்றனர். இதுவரை சுமார் 5,000 பேர் Bigg Boss Celebration Van அனுபவத்தைப் பெற்றுள்ளனர். இது நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள வலுவான வரவேற்பையும், Bigg Boss Tamil Season 10 மீதான ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறது. வரும் நாட்களில் Celebration Van மேலும் பல நகரங்களுக்கு தனது பயணத்தைத் தொடர உள்ளது.
அடுத்தகட்ட பயண இடங்கள்:
திருச்சி
18 செப் – தில்லைநகர் மெயின் ரோடு
19 செப் – கே.கே.நகர் மெயின் ரோடு
20 செப் – உறையூர் மெயின் ரோடு
21 செப் – கண்டோன்மென்ட்–வில்லியம்ஸ் ரோடு
மதுரை
22 செப் – கே.கே.நகர் மெயின் ரோடு
23 செப் – மாட்டுத்தாவணி–மேலூர் ரோடு சர்வீஸ் ஸ்ட்ரெட்ச்
24 செப் – காளவாசல்–பைபாஸ் ரோடு சர்வீஸ் ஸ்ட்ரெட்ச்
25 செப் – தல்லாகுளம்–அழகர் கோவில் ரோடு
26 செப் – பைபாஸ் ரோடு–பொன்மேனி ஸ்ட்ரெட்ச்
திருநெல்வேலி
27 செப் – வண்ணாரப்பேட்டை பைபாஸ் ரோடு
28 செப் – பாளையங்கோட்டை ஹை கிரவுண்ட் ரோடு
29 செப் – திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய சர்வீஸ் ரோடு
Bigg Boss Tamil Season 10-ஐ தினமும் இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியில் காணலாம். JioHotstar-ல் எப்போது வேண்டுமானாலும் ஸ்ட்ரீம் செய்யலாம். Bigg Boss வீட்டின் 24×7 நேரலை ஒளிபரப்பையும் JioHotstar-ல் காணலாம்.