Take a fresh look at your lifestyle.

விளம்பர நிகழ்ச்சிக்கு கிடைத்த அமோக வரவேற்பு! – ’லவ் ஓ லவ்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பு

9

தமிழ் சினிமாவில் விரைவில் வெளியாக இருக்கும் படங்களில் அதிக எதிர்பார்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ‘லவ் ஓ லவ்’ மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இப்படம் தொடர்பாக நடைபெற்ற நிகழ்விகளில் பங்கேற்ற திரையுலக பிரபலங்கள் பலர், “இப்படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும்” என்று வாழ்த்துறையில் உறுதியளித்ததை தொடர்ந்தே, படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வைரலாகி வருவதால், இப்படம் நிச்சயம் இளைஞர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் ஜூலை 10 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ள ‘லவ் ஓ லவ்’ படக்குழுவினர் பிரமாண்டமான விளம்பர நிகழ்ச்சிகளை திட்டமிட்டு நடத்த தொடங்கியுள்ளனர். முதலாவதாக சென்னை, அமைந்தக்கரை பகுதியில் உள்ள ஸ்கை ஒன் அம்பா மாலில் நடைபெற்ற படத்தின் விளம்பர நிகழ்ச்சி ரசிகர்களிம் அமோக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, மேலும் பல நிகழ்ச்சிகளில் ‘லவ் ஓ லவ்’ படக்குழு நேரடியாக மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இளமை துள்ளும் பொழுதுபோக்குத் திரைப்படமான ‘லவ் ஓ லவ்’ (LOVE OH LOVE) படக்குழுவினர் தங்களது திரைப்பட விளம்பர நிகழ்வை சென்னை ஸ்கை ஒன் ஆம்பா மாலில் (SkyOne Ampa Mall) மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கினர். அங்கு நடைபெற்ற சுறுசுறுப்பான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த மாலையில் படத்தின் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் நூற்றுக்கணக்கான சினிமா ரசிகர்களுடன் கலந்துரையாடினர்.

இந்த நிகழ்வில் படத்தின் சூப்பர் ஹிட் பாடல்களால் ஈர்க்கப்பட்ட துள்ளலான நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்று, மாலில் திரண்டிருந்த பெரும் கூட்டத்தை உற்சாகப்படுத்தின. நடிகர், நடிகையர் ரசிகர்களுடன் விரிவாகக் கலந்துரையாடி, வேடிக்கையான விளையாட்டுகளில் பங்கேற்று, அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதுடன், படம் உருவான போது நடந்த மறக்கமுடியாத நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர். ரசிகர்களின் உற்சாகமான பங்கேற்பு இந்த நிகழ்வை பெரும் வெற்றியாக மாற்றியது.

இந்த மாலையின் மிக முக்கிய சிறப்பம்சமாக, சமீபத்தில் வெளியான ‘லவ் ஓ லவ்’ படத்தின் டிரைலருக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பு அமைந்தது. இந்த டிரைலர் யூடியூபில் மட்டும் ஏற்கனவே 20 லட்சத்திற்கும் அதிகமான (2 Million+) பார்வைகளையும், அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் சேர்த்து 1 கோடிக்கும் அதிகமான (10 Million+) பார்வைகளையும் கடந்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எதிரொலித்துள்ளது.

படத்தின் இளமைத் துடிப்பு, பொழுதுபோக்கு தருணங்கள், புத்துணர்ச்சியூட்டும் காட்சிகள், ஆன்மாவைத் தொடும் இசை மற்றும் சிறந்த நடிப்பு ஆகியவற்றை பாராட்டிய ரசிகர்கள், இத்திரைப்படத்தை திரையரங்குகளில் காண தங்கள் ஆவலை வெளிப்படுத்தினர்.

சென்னை ஸ்கை ஒன் ஆம்பா மாலில் கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பைத் தொடர்ந்து, ‘லவ் ஓ லவ்’ படக்குழுவினர் வரும் நாட்களில் மேலும் பல சுவாரசியமான விளம்பர நிகழ்ச்சிகளை திட்டமிட்டுள்ளனர். படக்குழுவினர் விரைவில் மதுரை, கோவை, திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் பல நகரங்களுக்கு ‘ரோட் ட்ரிப்’ (Road Trip) மற்றும் மால் விளம்பர நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களை நேரில் சந்திக்கச் செல்லவுள்ளனர். இதற்கான விரிவான பயண அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும்.

மகேஷ் ராஜேந்திரன் எழுதி, இயக்கியுள்ள ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்தில் பவிஷ் நாராயண், நாக துர்கா, செல்வராகவன், கே.எஸ். ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா, அஷ்வத், சௌந்தர்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பாக்ஸ்ன் (Foxn) இசையமைத்துள்ளார், பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்ய, என்.பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளார்.

ஜினிமா மீடியா & எண்டர்டெயின்மென்ட் லிமிடெட் (Zinema Media & Entertainment Ltd.) பேனரின் கீழ் கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூஷன் (Creative Entertainers & Distribution) நிறுவனத்துடன் இணைந்து தினேஷ் ராஜ் மற்றும் தனஞ்ஜெயன் தயாரித்துள்ள ‘லவ் ஓ லவ்’ சமீபத்தில் வெற்றி பெற்ற ‘சிறை’, ‘யூத்’, ‘பிளாஸ்ட்’ உள்ளிட்ட வெற்றி படங்களின் வரிசையில் நிச்சயம் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.