’எக்ஸாம்’ தொடரை பாராட்டிய பிரபலங்கள்!

இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோரது தயாரிப்பு நிறுவனமான வால்வாட்ச்சர் பிலிம்ஸ் (Wallwatcher Films) தயாரிப்பில், ஏ.சற்குணம் எழுதி இயக்கியுள்ள சஸ்பென்ஸ் இணையத் தொடர் ‘எக்ஸாம்’. இதில் துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முதன்மை கதாபாத்திரத்திரங்களில் நடித்துள்ளனர். அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான இத்தொடரின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் பலர் இத்தொடரையும், தொடர் குழுவையும் பாராட்டியுள்ளனர்.

நடிகர் நானி இந்த தொடரின் திறமையான நடிகர் பட்டாளம் குறித்து பாராட்டியதோடு, பின்னணி குழுவுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

‘வதந்தி : தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ மூலம் கவனம் ஈர்த்த நடிகர் மற்றும் இயக்குநர் எஸ்.ஜெ.சூர்யா, ‘எக்ஸாம்’ தொடர் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார். ’சுழல் : தி வோர்டெக்ஸ் – சீசன் 2’ மூலம் பிரபலமான சம்யுக்தா விஸ்வநாதன் வால்வாட்ச்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் மற்றொரு தரமான படைப்பு என்றும், இத்தொடரை காண ஆவலாக காத்திருக்கிறேன், என்றும் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்பெக்டர் ரிஷி புகழ் சுனைனா, ’எக்ஸாம்’ தொடரை பார்ப்பது ஆவலாக காத்திருப்பதாக சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதே தொடரில் நடித்த கேப்ரியல்லா செல்லஸ், ப்ரைம் வீடியோ குழுவிற்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மேலும் ’வதந்தி : தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ மூலம் பிரபலமான அனகா மற்றும் ’சுழல் : தி வோர்டெக்ஸ்’ புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் தொடருக்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

பிரபலங்களின் இத்தகைய தொடர் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகளால் ‘எக்ஸாம்’ தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதோடு, உலக அளவில் பெரும் வரவேற்பு பெற்ற தமிழ் இணையத் தொடர்களில் இத்தொடர் முக்கியமானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் மொழியில் உருவாகி, தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட, ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில், வரும் மே 15 ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோ தளத்தில் ’எக்ஸம்’ பிரத்யேகமாக வெளியாகிறது.