Take a fresh look at your lifestyle.

நடிகை பிரிகிடாவுக்கு திருமணம்! – காதலரை கரம் பிடிக்கிறார்

17

யூடியுப் தொடர் மூலம் பவி டீச்சராக பிரபலமான பிரிகிடா சகா, பல படங்களில் நடித்து வரும் நிலையில், அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. அவர், ‘மீசைய முறுக்கு’ படத்தில் நாயகன் ஆதிக்கு தம்பியாக நடித்த அனந்த் ராமை திருமணம் செய்ய உள்ளார். இவரும் சினிமா மூலம் அறிமுகமாகி, காதலிக்க தொடங்கியுள்ளனர். தற்போது தங்களது காதலை அறிவித்திருக்கும் இவர்கள், திருமணம் பற்றிய அப்டேட்டையும் கொடுத்துள்ளனர்.

எளிய பின்னணியில் இருந்து சினிமா கனவை நோக்கி பயணித்த இருவரும், கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் மூலம் இன்று வளர்ந்து வரும் இளம் நடிகர்களாக தங்களை நிலைநிறுத்தி வருகின்றனர். சினிமாவே இவர்களை சந்திக்க வைத்ததோடு, அந்த நட்பு காதலாக மலர்ந்துள்ளது.

விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ள நிலையில், திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட வாழ்க்கையின் இந்த அழகான புதிய அத்தியாயத்துடன், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பல புதிய படைப்புகளிலும் இருவரும் முழு கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த புதிய பயணத்திற்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் அன்பும், ஆசீர்வாதமும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என இருவரும் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.