Take a fresh look at your lifestyle.

தக்‌ஷன் விஜய் நடிப்பில் உருவாகும் ‘துரோகம் பழகு’ படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டரை வெளியிட்ட முதலமைச்சர் என்.ரங்கசாமி

111

மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சி.பியூலா மகிழ் தயாரிப்பில், சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகும் படம் ‘துரோகம் பழகு’. தக்‌ஷன் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் லொள்ளு சலா ஜீவா, ஜி.எம்.குமார், ஜானகி அம்மா, வனிதா விஜயகுமார், அப்புக்குட்டி, அமுதவாணன், திவாகர், கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பாலா மற்றும் ராஜா இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்காக வைரமுத்து ஒரு சிறப்பு பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். வி.பி.விணு பெருமாள் ஒளிப்பதிவு செய்ய, அஷ்ரப் படத்தொகுப்பு செய்கிறார். முஜிபூர் ரஹ்மான் கலை இயக்குநராக பணியாற்ற, ரமேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். பி.ஆர்.ஓ-வாக கோபி பணியாற்றுகிறார்.

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இரண்டாம் பார்வை போஸ்டரை புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.

திரைப்படத்திற்காக படமாக்கப்பட்டிருக்கும் சில ரப் கட் காட்சிகளை பார்த்த முதலமைச்சர் என்.ரங்கசாமி, படக்குழுவின் பணியை பாராட்டியதோடு, திரைப்படக் குழுவினரின் கடின உழைப்பிற்காக, படம் நிச்சயம் வெற்றி பெறும், என்று வாழ்த்தினார்.

‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து திரைப்படம் வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.