இயக்குநர் பா.இரஞ்சி இயகக்த்தில் உருவாகியுள்ள பிரமாண்ட ஆக்ஷன் திரைப்படமான ‘வேட்டுவம்’ எப்படி உருவானது, ‘வேட்டுவம்’ என்றால் என்ன? என்பதை விளக்கம் வேட்டுவம் உலகம் வீடியோ வெளியீட்டு விழா நேற்று காலை சென்னை, சத்யம் பி.வி.ஆர் திரையரங்கில் நடைபெற்றது. படக்குழுவினர்களுடன் தமிழ் திரையுலக இயக்குநர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
இப்படத்தின் பான் இந்திய வெளியீட்டை முன்னிறுத்தும் வகையில், இந்தி பதிப்பிற்கு நடிகர் பங்கஜ் திருப்பாத்தி, தெலுங்கு பதிப்பிற்கு நடிகர் ராணா ரக்குபடி, மலையாள பதிப்பிற்கு நடிகர் சோபின் ஷாகிர், கன்னட பதிப்பிற்கு நடிகர் கிச்சா சுதீப் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். தமிழ் பதிப்பிற்கு இயக்குநர் பா.இரஞ்சித் குரல் கொடுத்துள்ளார்.
அபோகலிப்ஸ் பின்னணியில், பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’, பல்வேறு குழுக்களுக்கிடையேயான போட்டி, மோதல்கள் மற்றும் அவற்றால் உருவாகும் எதிர்பாராத சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. தனித்துவமான உலக அமைப்புடன் உருவாகியுள்ள இப்படம், பிரம்மாண்டமான காட்சியமைப்புகளையும் வலுவான ஆக்ஷன் களத்தையும் கொண்டுள்ளது.
படத்தில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகள் அடிமுறை மற்றும் மால்கம் உள்ளிட்ட பாரம்பரிய தற்காப்புக் கலைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்காக படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் முறையான தற்காப்புக் கலைப் பயிற்சியைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் ஆக்ஷன் காட்சிகளுக்கு இயல்பான தன்மையையும், வித்தியாசமான திரை அனுபவத்தையும் உருவாக்கியுள்ளனர்.
ஆர்யா, தினேஷ், ஷபீர், சோபிதா துலிபாலா, கலையரசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இப்படம், பிரம்மாண்டமான அதிரடியான ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியுள்ளது.
‘வேட்டுவம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகும் PAN Indian திரைப்படமாக உருவாகியுள்ளது.
திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே, அதன் பிரம்மாண்டமான உலகம் மற்றும் பா.இரஞ்சித்தின் இயக்கம் குறித்த எதிர்பார்ப்பு இந்தியத் திரையுலகில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய அளவில் கவனம் பெற்றுவரும் இயக்குநராக பா.இரஞ்சித் இருப்பதால், ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் அறிவிப்பும் பல்வேறு திரையுலக வட்டாரங்களில் குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் கலை இயக்குநர் S.S. மூர்த்தி, ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜி, படத்தொகுப்பாளர் செல்வா R.K., இசையமைப்பாளர் G.V. பிரகாஷ் குமார் மற்றும் ஸ்டண்ட் இயக்குநர் திலீப் சுப்பராயன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். திரைக்கதையை எழுத்தாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து எழுதியுள்ளார். வசனம் – ப்ராங்ளின்.
’World of Vettuvam’ வீடியோ மூலம் இப்படத்தின் தனித்துவமான உலகம் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.