’டெலிவரி பாய்’ திரைப்பட விமர்சனம்

காவல்துறை பணிக்காக காத்திருக்கும் லியோ சிவக்குமார், உணவு விநியோகம் செய்யும் வேலை செய்து வருகிறார். திடீரென்று அவரது அம்மா ராதிகாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட, அவரை காப்பாற்றுவதற்காக துஷ்யந்திடம் இருக்கும் பணத்தை திருடி விடுகிறார். அம்மா குணமடைந்த பிறகு, தான் திருடிய பணத்தை துஷ்யந்திடம் மீண்டும் ஓப்படைக்க செல்லும் லியோ சிவக்குமார், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதை அறிந்துக் கொள்கிறார். உயிருக்கு போராடிய தன் அம்மாவை காப்பாற்ற காரணமாக இருந்த துஷ்யந்தை ஆபத்தில் இருந்து காப்பாற்ற முடிவு செய்யும் லியோ சிவக்குமார், அதை எப்படி செய்தார் ?, யாரால் எதற்காக துஷ்யந்துக்கு ஆபத்து ஏற்பட்டது ? என்பதை பரபரப்பான ஆக்‌ஷனோடு சொல்வதே ‘டெலிவரி பாய்’.

நாயகனாக நடித்திருக்கும் லியோ சிவக்குமார், இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருப்பது திரையில் தெரிகிறது. குறிப்பாக முகத்தில் புதிய பொலிவுடன் ஜொலிப்பவர், காதல் காட்சிகளிலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி தேர்ச்சி பெற்றிருப்பவர், உணர்ச்சிகரமான காட்சிகளை சிறப்பாக கையாண்டு தான் முழுமையான ஆக்‌ஷன் ஹீரோவாக உருவாகியிருப்பதை நிரூபித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் பிரிகிடா சாகா, முதல் பாதியை நகர்த்த பயன்படுத்துவதற்காக மட்டுமே தேவைப்பட்டிருக்கிறாரே தவிர திரைக்கதையில் முழுமையாக பயணிக்கவில்லை.

காளி வெங்கட், ஜென்சன் திவாகர், போஸ் வெங்கட், துஷ்யந்த், உதயா தீப் ஆகியோரது திரை இருப்பு மற்றும் நடிப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.

கொடூரமான குற்றங்களை செய்யும் ஏழு நண்பர்களாக நடித்திருக்கும் இளைஞர்கள் தமிழ் சினிமாவின் பழை படங்களை நினைவுப்படுத்தினாலும், தங்களது பணியை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

அசோக்குமார் ராஜ் மற்றும் பிரசன்னா எஸ்.குமார் ஆகியோரது ஒளிப்பதிவில் ஆக்‌ஷன் காட்சிகளும், சேசிங் காட்சிகளும் மிரட்டல். நாயகனையும், நாயகியையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் புதியவர்களை கூட ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார்.

சுந்தரமூர்த்தி.கே.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் முனுக்கமுனுக்க வைப்பதோடு ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகளில் இருக்கும் ஆக்ரோஷத்தை அதிகரிக்க செய்திருக்கிறது.

படம் வேகமாக நகரும்படி காட்சிகளை சுருக்கமாக வெட்டியிருக்கும் படத்தொகுப்பாளர் ஆர்.வசந்தகுமார் படத்தை தொய்வின்றி நகர்த்தி சென்றிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் நானி, தன்னை பாதித்த ஒரு படத்தை புதிய வடிவில் கையாண்டு, புத்திசாலித்தனமாக கொடுத்ததில் வெற்றி பெற்றிருக்கிறார்.

கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, கதை சொல்லலில் புதிய முயற்சி, கமர்ஷியல் அம்சங்களை அளவாக கையாண்ட விதம் ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களை திருப்திப்படுத்தும் முழுமையான பொழுதுபோக்கு ஆக்‌ஷன் படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் நானியை பாராட்டி வரவேற்கலாம்.

மொத்தத்தில், ‘டெலிவரி பாய்’ நிறைவான ஆக்‌ஷன் திரில்லர்.

ரேட்டிங் 3.5/5

delivery boy movie reviewdelivery boy reviewtamil movie delivery boy reviewடெலிவரி பாய் திரைப்பட விமர்சனம்டெலிவரி பாய் விமர்சனம்தமிழ்ப் படம் டெலிவரி பாய்
Comments (0)
Add Comment