Take a fresh look at your lifestyle.

ஜூலை 3 ஆம் தேதி வெளியாகும் ‘அருபீ’!

144

அறிமுக இயக்குநர் அபிலாஷ் வாரியார் இயக்கத்தில், புணர்த்தம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரதீப் ராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அருபீ’.

திகில் திரைப்படமான இதில், ஜாய் மேத்யூ , வைசாக் ரவி , நேஹா சாவ்லா , சாக்ஷி பாதலா , சிந்து வர்மா , கிரண் ராஜ் , கண்ணன் சாகர் , விஜி பால் , ஆதித்ய ராஜ் , அபிலாஷ் வாரியர், மேத்யூ ராஜு, நெபு ஆபிரகாம்.சுஜா ரோஜா, அஞ்சனா மோகன், ஏஞ்சல் மரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஆமன் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

கேரளாவின் கொச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் அனைத்து பணிகள் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

வரும் ஜூலை 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை பி.கே.ஆர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரணய் காலியப்பன் வெளியிடுகிறார்.