Take a fresh look at your lifestyle.

கமல்ஹாசனை சீண்டிய இயக்குநர் மிஷ்கின்! – காரணம் கலைப்புலி தாணுவா ?

11

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், ஐரா தயானந்த், ப்ரீத்தி கரன், மாளவிகா தியா ஷர்மா, நாசர், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ட்ரெயின்’. (Train) நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருக்கும் இப்படம் பற்றி பெரிதாக் எந்த ஒரு தகவலும் வெளியாகத நிலையில், கடந்த ஜூலை 12 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை சென்னை, சத்யம் பி.வி.ஆர் திரையரங்கில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் கடந்த 5 வருடங்களுக்குள்ளாக ஒரு படமாவது இயக்கிய அனைத்து இயக்குநர்களும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பதாக அழைப்பிதழில் தகவல் வெளியிடப்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டு வழக்கம் போல், இயக்குநர் மிஷ்கின், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் பாராட்டி பேசினார்கள்.

இந்த நிலையில், படம் பற்றி பேசிய இயக்குநர் மிஷ்கின் வழக்கம் போல் உணர்ச்சி மிகுதியால் கொஞ்சம் அதிகப்படியாகப் பேசினார். குறிப்பாக, இந்த படம் நல்லா இல்லை என்றால், என்னை செருப்பால் அடிங்க…, என்றும் பேசினார். (யாரு இப்படி தேடி வந்து செருப்ப கையில எடுத்து வந்து அடிக்கப் போறாங்க என்ற நினைப்பு )

இது மட்டும் அல்ல, இந்த நிகழ்ச்சிக்கு சம்மந்தம் இல்லாத நடிகர் கமல்ஹாசனையும் இயக்குநர் மிஷ்கின் சீண்டியிருப்பது தான் தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. மிஷ்கினின் இந்த சர்ச்சை பேச்சுக்கு தயாரிப்பாளர் தாணுவும் ஒரு காரணமாக இருப்பார், என்ற ரீதியிலும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

அதாவது நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மிஷ்கின், ”நந்தலாலா கதை சொல்லும் போது தானு சார் மீட் பண்ணினேன், ஆனா சார்க்கு கதை ஒண்ணுமே புரியல. ஆனால் விக்ரமுக்கு அந்த கதை ரொம்ப பிடிச்சது, பட் எங்களால் அப்பொழுது ஒன்னா சேர்ந்து படம் பண்ண முடியல, அது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. அதற்கு பிறகு தான் தானு சாரை மீட் பண்ணி ஒரு கதை பண்ணலாம்னு சொன்னேன். அவர் விஜய் சேதுபதி வைத்து பண்ணலாமுன்னு சொன்னார். விஜய் சேதுபதி என்கூட இரண்டு நாள் வொர்க் பண்ணி இருக்காரு, ஒரு பத்து வருடத்திற்கு முன்னாடி நான் அவருக்கு நோ சொல்லிட்டு அதுக்கப்புறம் பெரிய நடிகராக வளர்ந்துட்டாரு. என்னுடைய சைக்கோ படம் பாத்துட்டு என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். விஜய் சேதுபதி அவரை மிக சிறந்த மனிதனாக நான் பார்த்தேன், இந்தப் கதையை எழுதும் போது விஜய் சேதுபதிக்காக நான் பார்த்து பார்த்து எழுதினேன். இந்தப் படத்தை விஜய் சேதுபதி தவிர வேறு யாராலும் பண்ணி இருக்கவே முடியாது, கமல் சார் கூட பண்ணிருக்க முடியாது. விஜய் சேதுபதி ஒரு எரிமலை மாதிரி. என்னோட படத்தை பத்தி நான் பெருமையா பேசல படம் நல்லா இல்லைனா என்னை செருப்ப கழட்டி அடிங்க, விஜய் சேதுபதி நடிப்பை என்னால மறக்கவே முடியாது எல்லாமே முதல் டேக் ஓகே பண்ணிட்டாரு. ஒரு காட்சி ஒரு டைம் சொன்னாலே அதை புரிஞ்சு மனசுல இருந்து நடிக்சு முடிச்சுருவாறு. நான் நாசர் நரேன் கூட ஒர்க் பண்ணி இருக்கேன், ஆனால் விஜய் சேதுபதி நடிக்க வைத்தது எனக்கு மிகப்பெரிய சந்தோசம் நான் பெருமைப்படுகிறேன். தானு சார்க்கும் ரொம்ப நன்றி. உங்க மேல மிகப்பெரிய நம்பிக்கை இருக்கு, பிசாசு 2 தயாரிப்பாளருக்கும் என்னுடைய நன்றி, அந்தப் படம் வரும் அதுக்காக நான் காத்திருப்பேன். சினிமா அப்படித்தான் இருக்கும் தானு சாருக்கு ரொம்ப நன்றி உங்க காலத் தொட்டு வணங்குகிறேன் இளையராஜா போன்று சுறுசுறுப்பான மனிதராக உங்களைப் பார்க்கிறேன் ரொம்ப நன்றி.” என்று தெரிவித்தார்.

விஜய் சேதுபதி நல்ல நடிகர் என்று மிஷ்கின் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டாலாம், அது அவரது உரிமை, ஆனால், கமல் சாரால் கூட இப்படி நடிக்க முடியாது என்று சொன்னது எல்லாம் திமிரான பேச்சு. அவரது திமிரான பேச்சுக்கு காரணம், அவரது இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க மறுத்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். மேலும், ஏற்கனவே தயாரிப்பாளர் தானுவுக்கும், கமல்ஹாசனுக்கும் இடையே இருக்கும் பிரச்சனையை பயன்படுத்தி மிஷ்கின் இப்படி அதிகமாக பேசியிருக்கிறார். அவரது இந்த பேச்சுக்கு தயாரிப்பாளர் தாணுவும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் கமல்ஹாசன் மீது தனக்கு இருக்கும் கோபத்தை வெளிக்காட்டியிருக்கிறார்.

இவர்களது பேச்சு கமல்ஹாசன் மீதான் கோபத்தின் வெளிப்பாடாக இருந்தாலும், வியாபாரம் ஆகாத ட்ரெயின் படத்திற்கான மலிவான விளம்பர யுக்தியாகவும் பார்க்கப்படுகிறது. பிரமாண்டமான விளம்பரம் செய்யக்கூடிய தயாரிப்பாளர் என்ற பெயர் எடுத்த தயாரிப்பாளர் தாணு, தற்போது மலிவான விளம்பரம் செய்ய தொடங்கியிருக்கிறார்.