திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், ஏவியட் பிக்சர்ஸ் (Aviate Pictures) நிறுவனத்தின் கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணந்து தயாரிக்கும் படத்தில் நடனக் கலைஞரும், நடிகருமான விஜய் வர்மா, நாயகனாக அறிமுகமாக, பிரபு மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் நாயகியாக ஷிவாத்மிகா ராஜசேகர் நடிக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் முத்துக்குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன், கவிதா பாரதி மற்றும் அவினாஷ் ரகுதேவன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
‘ரைட்டர்’ பட இயக்குநரும், ‘டிசி’ பட எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் எழுதி இயக்கும் இப்படம் டார்க் ஹியூமர் ஜானரில், வித்தியாசமான கதைக்களத்தில், திரில்லர் கலந்த காமெடி திரைப்படமாக உருவாக உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இந்த நிகழ்வில் நடிகர் விக்ரம் பிரபு மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று, படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா G.K படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். P.C. ஸ்டன்ட்ஸ் சண்டைப் பயிற்சியைக் கவனிக்க, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். நவ்ஷாத் அகமது ஆடை வடிவமைப்பையும், சக்தி வெங்கட்ராஜ் M கலை இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர்.
வித்தியாசமான கதைக்களத்தில், அனுபவம் வாய்ந்த நடிகர் பிரபு மற்றும் இளம் தலைமுறை நடிகர்கள் இணையும் இந்தப் புதிய படம், ரசிகர்களுக்கு ஒரு புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் தலைப்பு மற்றும் இதர முக்கிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.