Take a fresh look at your lifestyle.

ரஜினிகாந்தின் 51 வது ஆண்டு சினிமா பயணத்தை கொண்டாடிய ‘தர்மன்’ படக்குழு!

138

இந்தியத் திரையுலகில் ஆகஸ்ட் 15 ஒரு மிக முக்கியமான நாளாகும்; ஏனெனில், அன்றுதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்பட உலகில் தனது மறக்க முடியாத பயணத்தைத் தொடங்கினார். 1975-ஆம் ஆண்டு இதே நாளில் அபூர்வ ராகங்கள் திரைப்படம் வெளியானது. இது இந்தியத் திரையுலகின் மிகவும் புகழ்பெற்ற சூப்பர் ஸ்டாரை உருவாக்கிய ஒரு அற்புதமான திரைப்பயணத்தின் தொடக்கமாக அமைந்தது.

திரைத்துறையில் அவர் நுழைந்து 51 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் சிறப்பு கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் ‘தர்மன்’ படக்குழுவினர் அனைவரும் இணைந்து, தொடரும் இந்தப் பயணத்தில் ‘ரஜினியிசம்’ எனும் உத்வேகம் அளிக்கும், மகிழ்விக்கும் மற்றும் வரலாறு படைக்கும் ஒரு மாபெரும் பாரம்பரியத்தை ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தை, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா ஆகிய நிறுவனங்களின் சார்பில் திரு. கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிப்பது படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தை மேலும் சிறப்பானதாக்கியது.